தேவையான பொருள்கள்
வேர்க்கடலை அரை கப்
ஏலக்காய் பொடி சிறிதளவு
நெய் 4 டேபிள்ஸ்பூன்
வெல்லம் தூள் அரை கப்
செய்முறை
வேர்க்கடலையை நன்றாக வறுத்து தோல் நீக்கிக் கொள்ளுங்கள் பின்பு வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து நன்றாக கட்டி ஆனவுடன் இறக்கிக் கொள்ளுங்கள் பின்பு அதில் வேர்க்கடலையை கொட்டி நன்றாக கிளறுங்கள் நன்றாக கலந்த பின்பு வேறொரு பாத்திரத்தில் மாற்றுங்கள் கையில் சிறிதளவு நெய் தடவி கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக்கொள்ளுங்கள் இப்போது சுவையான கடலை உருண்டை தயாராக உள்ளது மிகவும் சுவையாகவும் இனிப்பாகவும் மிகவும் அருமையாக இருக்கும் நீங்கள் அதை செஞ்சு பாருங்க
1 Comments
super recipe i like it
ReplyDeleteThank you for comment