ஹோட்டல் சுவையில் அருமையான குஸ்கா செய்வது எப்படி

Header Ads

ஹோட்டல் சுவையில் அருமையான குஸ்கா செய்வது எப்படி

ஹோட்டல் சுவையில் அருமையான குஸ்கா செய்வது எப்படி
 தேவையான பொருள்கள்
நன்றாக பழுத்த தக்காளி 4 
பெரிய வெங்காயம் 3 
பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை தேவையான அளவு 
இஞ்சி பூண்டு விழுது தேவைக்கேற்ப மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
 பச்சை மிளகாய் 4 
உப்பு தேவைக்கேற்ப 
நெய் ஒரு கப் 
கடலை எண்ணெய் தேவைக்கேற்ப  மல்லித்தழை புதினா இலை தேவைக்கேற்ப 
பாஸ்மதி அரிசி 2 கப்
 கரம் மசாலா பொடி இரண்டு டீஸ்பூன் கருவேப்பிலை ஒரு கொத்து மிளகாய்தூள் ஒன்றரை டீஸ்பூன் தயிர் ஒரு கப்
செய்முறை
 ஒரு குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ளவேண்டும் குக்கர் காய்ந்தவுடன் ஒரு கப் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்  அதனுடன் தேவைக்கேற்ப கடலை எண்ணெய் சேர்த்துக்கொள்ளவேண்டும் நன்றாக காய்ந்தவுடன் மூன்று வெங்காயத்தை  கழுவி நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்  அதனுடன் சேர்த்து  நன்றாக கிளற வேண்டும்  நன்றாக பொன்னிறமாக வரும் வரை வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்  இதனுடன் தக்காளி சேர்த்து  நன்றாக கிளற வேண்டும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவேண்டும் தயிர் ஒரு கப் சேர்த்துக் கொள்ள வேண்டும் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவேண்டும் ஒன்றரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவேண்டும் உப்பு தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ள வேண்டும்  கருவேப்பிலை ஒரு கொத்து சேர்த்துக்கொள்ள வேண்டும்  கரம் மசாலா 2 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும் நன்றாக மணம் வந்தவுடன் 2 கப் பாஸ்மதி அரிசியை கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும் அதை ஒரு 20 நிமிடம் தண்ணீரை 2 டீஸ்பூன் என்னை விட்டு கலந்து ஊற வைக்க வேண்டும் அப்போதுதான் நன்றாக உதிரி உதிரியாக குஸ்கா இருக்கும்  இப்போது இந்த அரிசியை  தக்காளி வதங்கியவுடன் அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் இரண்டு கப் அரிசிக்கு  நான்கு கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்  இப்போது  குஸ்காவுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் மல்லித்தழை புதினாா இல்லைை சேர்த்துக் நன்றாக கிளறி விட்டவுடன் 3 விசில் வரும் வரை குக்கரைை மூடி போட்டு வேகவைத்து இறக்கிக் கொள்ள வேண்டும் வெந்தவுடன் இறக்கி விசில் அடங்கியவுடன் நன்றா கிளறி விட வேண்டும் இப்போது சுவையான  ஹோட்டல் சுவையில் உதிரி உதிரியான குஸ்கா தயாராக உள்ளது நீங்களும் இதை செஞ்சு பாருங்க 

Post a Comment

0 Comments