தேவையான பொருட்கள்
ஆட்டுக்கால் -5
காய்ந்த மிளகாய் -5
மிளகு -1/2 ஸ்பூன்
மல்லி- 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
தக்காளி- 2
கருவேப்பிலை -சிறிதளவு மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சி -பெரிய துண்டு
பூண்டு - 15 பல்
சாம்பார் வெங்காயம் - 100 கிராம் பட்டை - 1
லவங்கம் - 2
நட்சத்திர பட்டை - 1
உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
1. ஒரு கடாய் எடுத்துக்கொள்ளவேண்டும் கடை சூடானதும் காய்ந்த மிளகாய் ,மல்லி, மிளகு, சீரகம் சோம்பு அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும் .
2.வெறும் கடாயில் வறுத்து எடுக்கவும்பின்னர் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்..
3.மிதமான சூட்டில் பட்டை,லவங்கம், அண்ணாச்சி பூ சேர்த்து வதக்கவும்
4.ஆற வைக்க வேண்டும்..
5.பின்னர் எலும்பு வேக வைக்க வேண்டும்.
6.ஆட்டுகால் நன்கு சுத்தப்படுத்தி ஒரு குக்கரில் சேர்க்கவும். பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, வேக வைப்பதற்கு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிண்டி விடவும்.
7.10அல்லது15 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ள வேண்டும்... அப்போது தான் ஆட்டுக்கால் நன்றாக வேகும்.
8.வறுத்து வைத்திருக்கும் மாசாலா பொருட்கள் நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்
9.தாளிப்பதற்கு காடாய் எடுத்து கொள்ள வேண்டும்.. நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
10.பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
11. பின்னர் பேஸ்ட் பண்ணி வைத்திருக்கும் மசாலாவை இதனுடன் சேர்த்து தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க விடவும்.
12 . நன்றாக கொதித்ததும் வேக வைத்திருக்கும் ஆட்டுக்காலை இதனுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இப்போது ரொம்ப டேஸ்டியாய் ஆட்டுக்கால் சூப் தயார்
இதை வீடியோவாக பார்க்க ஜிபாஸ் கிச்சன் யூடியூப் சேனலில் பாருங்கள்
3 Comments
Nice
ReplyDeleteThank u
DeleteThe King Casino: The New King & The World of Gaming
ReplyDeleteThe febcasino.com King Casino is the new place where the real money gambling is legal in Florida and Pennsylvania. We love https://vannienailor4166blog.blogspot.com/ the https://jancasino.com/review/merit-casino/ new septcasino casino. We've got https://febcasino.com/review/merit-casino/ some great
Thank you for comment