காரக் குழம்பு செய்வது எப்படி

Header Ads

காரக் குழம்பு செய்வது எப்படி

நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற  பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம்.
 இது பெரும்பாலோனோர் பலவகையாக இந்த கார குழம்பு செய்து சாப்பிடுவார்கள்.

 கொண்டைக்கடலை, சேனைக்கிழங்கு கார குழம்பு, வெங்காய கார குழம்பு, கத்தரிக்காய் காரக்குழம்பு, முருங்கைக்காய் காரக்குழம்பு,
சேப்பக்கிழங்கு காரக்குழம்பு, புளிப்பும் காரமும் சேர்ந்து அட்டகாசமான சுவையைக் கொடுக்கும் இப்போது தேவையான பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்
 தேவையான பொருட்கள் 

1: கத்தரிக்காய் -2
2: பெரிய வெங்காயம் -2
3: சின்ன வெங்காயம் -ஒரு ஏழு 4:கடுகு -ஒரு ஸ்பூன் 
5:வெந்தயம் -ஒரு ஸ்பூன் 
6:சீரகம் -ஒரு ஸ்பூன் 7:கடலைப்பருப்பு -ஒரு ஸ்பூன் 8:கருவேப்பிலை -சிறிதளவு 9:தேவையான அளவு உப்பு 10:நல்லெண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
11: பூண்டு- 10 பல் 
12:புளி கரைசல்
13:தக்காளி -2
14: மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
15:குழம்பு மாசாலா - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

1: முதலில் ஒரு கடாய் எடுத்துக்கொள்ள வேண்டும் கடாய் சூடானதும் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும் தேங்காய் எண்ணெய் நன்றாக  சூடானதும் ஒரு ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு வெந்தயம் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
2: நன்றாக வதக்கிய பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்துக்கள்ளவேண்டும் சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளவேண்டும் மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்
3: பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து கொள்ள வேண்டும் பூண்டு நசுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்
4: ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் 2 டேபிள்ஸ்பூன் குழம்பு மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கி விடவும்
5: பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி விடவும் 
6:இதோடு  புளி கரைசல் சேர்த்துக் கொள்ளவும் நன்றாக கொதிக்க விடவும் தேவையான அளவு உப்புசேர்த்துக்கொள்ளவும் .
7:நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கொதிக்க விடவும் 
8:மிதமான தீயில் வைத்து கொள்ளவும்
9: இப்போது ரொம்ப சூப்பரான கமகமக்கும் கத்தரிக்காய் கார குழம்பு ரெடி ஆகிவிட்டது
10: இதை இன்னொரு டைப்பில் கத்தரிக்காயில் கட் பண்ணாமல் சிறிய கத்தரிக்காய் இருந்தால் நீளவாக்கில் கீறி விட்டு அதை எண்ணெயில் பிரை பண்ணி அது குழம்பு செய்து முடித்தவுடன் அதில் போட்டு சேர்த்துக்கொள்ளலாம் இப்படியும் செய்து சாப்பிடும் போது இன்னும் அதிகமான சுவையைக் கொடுக்கும்.
இந்தக் குழம்பை யூடியூப் மற்றும் பேஸ்புக்கில் எவ்வாறு தேடலாம் 
கார குழம்பு செய்வது எப்படி 
தமிழ் சமையல் 
சமையல் குறிப்புகள் 
கார குழம்பு இன் தமிழ் 
குழம்பு செய்வது எப்படி 
 குழம்பு எவ்வாறு செய்யலாம் 
மசாலா குழம்பு

Post a Comment

1 Comments

Thank you for comment