ஆரஞ்சு பழம் இத்தனை நோய்களை குணப்படுத்துமா....இது தெரியாம போச்சே இவ்வளவு நாள்.....

Header Ads

ஆரஞ்சு பழம் இத்தனை நோய்களை குணப்படுத்துமா....இது தெரியாம போச்சே இவ்வளவு நாள்.....

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் நிறைய வகை பழங்கள் உள்ளது அந்த வகை பழங்களில் ஒன்று ஆரஞ்சு பழம். இந்த பழம் மிக எளிதாகவே நமக்கு கிடைக்கிறது. இந்த பழத்தை நாம் அன்றாடம் கண்கூடாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் இந்த பழத்தின் மருத்துவ பயன்பாடுகள் பற்றி நாம் அறிந்ததில்லை அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.ஆரஞ்சு பழத்தின் பயன்பாடுகளை நாம் அறியும் போது நமக்கு வியப்பாக இருக்கும் அத்தகைய குணாதிசயங்கள் இந்த ஆரஞ்சு பழத்தில் நிரம்பி உள்ளது. 


முதலில் ஆரஞ்சு பழத்தைப் பற்றி சில விவரங்களை அறிந்து கொள்வோம் இப்போது நான் சொல்ல போகும் தகவல் யாரும் அறிந்திராத ஒன்று ஆரஞ்சு பழத்திற்கு தோடம்பழம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இந்த பெயர் நாம் இக்காலங்களில் பயன்படுத்துவதில்லை மேலும் இது பூக்கும் தாவர வகையை சார்ந்தது. இது சிட்ரஸ்× சினேசிஸ் என்ற பேரினத்தை சேர்ந்தது. இதனுடைய நிறத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள் செம்மஞ்சள் நிறம் இது கோள வடிவமானது.ஆரஞ்சு மரம் சராசரியாக 10 மீட்டர் வரை உயரம் வளரக்கூடியது. இது எல்லா இடங்களிலும் வளரும் தன்மையுடையது அல்ல இது வெப்ப மற்றும் மித வெப்ப பகுதிகளில் அதிகமாக வளர்கிறது. இதன் இலை மென்மையாக இருக்கும், பூ வெண்மை நிறமாக இருக்கும். ஆரஞ்சு மரம் சராசரியாக ஒரு வருடத்திற்கு ஆயிரம் பழங்களை தரும். ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொண்டால் இது தோலால் மூடிய ஒருவகை பழமாகும். தோலுக்கு உள்ளே பழச்சுருளை அமைந்துள்ளது. ஆரஞ்சு இனம் இன்னும் நிறைய பழங்களை உள்ளடக்கியது  அவை எலுமிச்சை., நாரத்தை, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, பப்பளிமாஸ் ஆகும்.


 ஆரஞ்சு பழத்தின் மருத்துவ பயன்பாடுகள் 

ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி மற்றும் பி சத்து உள்ளது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் இதயத்தை சீராக செயல்பட உதவுகிறது. மேலும் ஆரஞ்சு பழத்தில் உள்ள பிலேவனாய்டு புண்களை குணப்படுத்த உதவுகிறது.மேலும் ஆரஞ்சு பழம் புற்றுநோயை தடுப்பதற்கு உதவுகிறது.இதில் வைட்டமின் பி சத்து உள்ளதால் இது பிறவி குறைபாடுகளை குணப்படுத்தவும் இதய நோய்களை எதிர்க்கவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி சத்து தடிமனை தடுக்கவும் உதவுகிறது .ஆரஞ்சு பழத்தில் உள்ள ஹெர்ஸ்பெரிடின் இதய அடைப்பை தடுக்க உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள மெக்னீசியம் ரத்த நாளங்களை விரிவடையச் செய்ய உதவுகிறது மேலும் வெள்ளை அணு உற்பத்தியை அதிகரிக்கிறது. இது அல்சர் நோயையும் குணப்படுத்தும். ஆரஞ்சு ஜூஸ் தினமும் பருகுவதனால் சிறுநீரக கற்கள் பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் இந்த ஆரஞ்சு பழம் புற்றுநோய்க்கு காரணமான பிரீ ரெடிகல்ஸை அளிக்கும் தன்மையுடையது. மேலும் இது குடல், நுரையீரல், வாய் புற்றுநோயை தடுக்கும். இதில் உள்ள பீட்டா கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இளமையான சருமத்தை கொடுக்கும். இந்த பழம் உடல் எடையை குறைக்கவும் உதவும்.இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்து கொழுப்பை குறைக்கும்.இந்த பழம் ரத்த சோகையை குணப்படுத்தும் உடலிலுளள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கும்.நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இதில் உள்ள பாலிஃபீனால் வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும்.இப்பழத்தில் உள்ள கால்சியம் பற்கள் உறுதியாக இருக்க உதவும்.மேலும் இதில் உள்ள கரோட்டினாய்டு கண் பிரச்சினைகளை தடுக்கும். மேலும் இதன் முக்கியமான பயன்பாடுகளில் ஒன்று இந்த பயன்பாடு ஆண்களுக்கு மிகவும் உதவிகரமாக ஒன்று  இப்பழத்தில் உள்ள ஃபோலைட் விந்தணுக்களை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

இத்தகைய பயன்பாடுகளை உள்ளடக்கியது ஆரஞ்சுப்பழம்.எனவே நாம் ஆரஞ்சு பழத்தை தவிர்க்காமல் முடிந்த அளவு உணவோடு எடுத்துக் கொள்வோம்.

நன்றி
By
Prabhu

Post a Comment

0 Comments