இந்த எள்ளு பொடி என்பது அரசர் கால உணவு முறையில் இருந்து இன்று வரை நடைமுறையில் இருக்கும் பழங்கால உணவுகளில் ஒன்று பழங்காலத்தில் கூழுக்கு மற்றும் கஞ்சிக்கு இதை கூட்டாக பயன்படுத்தி வருகின்றனர் தற்பொழுது இக்காலகட்டத்தில் இதை தோசை மற்றும் இட்லி போன்றவைகளுக்கு சைட் டிஷ் ஆக தொட்டு சாப்பிடுகின்றனர் இந்த எள்ளு பொடி மருத்துவ குணம் உடையது இதை அதிகமாக சாப்பிடும் பொழுது கொழுப்பு குறையும் என்பதே உண்மை. ஆனால் பலருக்கு இந்த எள்ளு பொடி பிடிப்பதில்லை சத்தான ஆகாரம் என்றாலும் அவர்களுக்கு பிடிப்பதில்லை இந்த எள்ளு பொடியை செய்ய
தேவையான பொருட்கள்
எள்ளு இரண்டு பாக்கெட்
காய்ந்த வத்தல் எட்டு
கடலைப்பருப்பு 50 கிராம்
உளுந்தம் பருப்பு 3 டேபிள் ஸ்பூன் புளி சிறிதளவு
வெள்ளைப்பூடு ஐந்து பற்கள் எண்ணெய் சிறிதளவு
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
அடுப்பில் கடாய் வைக்க வேண்டும் கடாய் காய்ந்தவுடன் இரண்டு பாக்கெட் எள்ளு அதனில் கொட்டி நன்றாக கிளற வேண்டும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும் நன்றாக கிளறிய பிறகு எள்ளு நன்றாக பொரிந்த உடன் அதனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் பின்பு கடலைப்பருப்பை கடாயில் போட்டு நன்கு சிவக்கும் படி வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் எனவே வேறு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் அதேபோன்று உளுந்தம் பருப்பு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் வத்தல் அதனுடன் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் வத்தலை சேர்த்து நன்கு அரைக்க வேண்டும் பின்பு கடலைப்பருப்பு சேர்த்து அரைக்க வேண்டும் அது அறைந்த உடன் உளுந்தம் பருப்பு சேர்த்து அரைக்க வேண்டும் இப்போது எல்லை சேர்த்துக் கொள்ள வேண்டும் இதனுடன் புளியை சேர்த்துக் கொள்ள வேண்டும் பின்பு வெள்ளை பூண்டு சேர்த்துக் கொள்ளுங்கள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் இப்போது நமக்கு தேவையான எள்ளு பொடி தயாராக உள்ளது இது தோசைக்கு இட்லிக்கு ஆப்பத்துக்கு சாம்பார் சாதத்துக்கு ரசம் சாதத்துக்கு அருமையாக இருக்கும் நீங்களும் இதை செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கும் இது பிடிக்கும்
குறிப்பு
இந்த எள்ளு பொடியுடன் நல்லெண்ணெய் சிறிது சேர்த்து கிளறி பரிமாறவும்
மருத்துவ பயன்கள்
சர்க்கரையின் அளவை குறைக்க வல்லது
தொப்பையை குறைக்க வல்லது
எள்ளு வகைகள்
கருப்பு நிற எள்ளு
வெள்ளை நிற எள்ளு
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை பார்க்க எங்கள் முகநூலில் இணையவும்
Facebook page fb videos
YouTube channel Creator Jeeva
1 Comments
Thank you
ReplyDeleteThank you for comment