தேவையான பொருள்கள்
கோதுமை மாவு இரண்டரை கப்
துருவிய வெல்லம் இரண்டரை கப் ஏலக்காய் பொடியை சிறிதளவு
பச்சரிசி 2 கப்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
கோதுமையை தண்ணீரில் 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும் அரிசியை தனியாக 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள் பின்பு நன்றாக நனைந்தவுடன் கிரைண்டரில் இரண்டையும் ஒன்றாக சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளுங்கள் நன்றாக அரைபட்டு பின்பும் மாவு வலிக்கும் போது கடைசியாக வெல்லம் சேர்த்து 2 நிமிடம் அரைதது எடுத்துக் கொள்ளுங்கள் பின்பு இதனுடன்2 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளுங்கள் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளுங்கள் பின்பு ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள் என்னை காய்ந்தவுடன் அதில் கொஞ்சமாக விட்டு நன்றாக வெந்தவுடன் மறுபுறம் திருப்பிப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் இப்படியே எல்லா மாவையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள் வெந்தவுடன் ஒரு தட்டில் எடுத்து பரிமாறலாம் சுவையான கோதுமை அப்பம் தயாராக உள்ளது நீங்கள் அதை செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்
#Sweets #indian #foods #indiansweets #appam
2 Comments
best recipe indian sweets always good
ReplyDeleteIwill try best
ReplyDeleteThank you for comment