அன்னாசி பழத்தின் நன்மைகள்,தீமைகள் தெரிந்துகொள்வோம்.ஆச்சரியமூட்டும் தகவல்கள் நிறைந்துள்ளது.

Header Ads

அன்னாசி பழத்தின் நன்மைகள்,தீமைகள் தெரிந்துகொள்வோம்.ஆச்சரியமூட்டும் தகவல்கள் நிறைந்துள்ளது.

இயற்கை நமக்கு பலவிதமான பழங்களையும் காய்கறிகளையும் தந்துள்ளது அவை ஒவ்வொன்றும் நமக்கு பல்வேறு வழிகளில் பயன்படுகிறது. நாம் இன்று அன்னாசி பழத்தின் பயன்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

அன்னாசி பழத்தை பற்றிய சில தகவல்கள்

 அன்னாசி பழம் பூக்கும் தாவரமாகும். அன்னாசி மரத்தினை செந்தாழை என்றும் அழைப்பர்.அன்னாசி பழத்தின் பேரினம் அனானஸ்.இதன் இனம் கோமோசுஸ். இது பிரேசில் நாட்டின் தென் பகுதியையும்,பராகுவே நாட்டினையும் தாயகமாகக் கொண்டது. இது வெப்பமான பகுதிகளில் வளரும்.
அன்னாசி பழத்தில் உள்ள சத்துக்கள்

அன்னாசி பழத்தில் பலவிதமான சத்துக்கள் உள்ளன அவை விட்டமின் சி மற்றும் B-5, புரோட்டின்,பீட்டா கரோடின்,புரோமலைன், நார்ச்சத்து, தயாமின், பொட்டாசியம், கால்சியம், காப்பர், மெக்னீஸ் ஆகும்.

 அன்னாசி பழத்தின் நன்மைகள்
அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன் மூட்டுவலிக்கு சிறந்த நிவாரணமாகும் மேலும் இது புரதத்தை செரிக்க கூடியது. அன்னாசியில் உள்ள தையாமின் மற்றும் விட்டமின் சி உடலில் உள்ள சுரப்பிகள் சீராக செயல்படுவதற்கு உதவுகிறது. அன்னாசியில் நார்ச்சத்து உள்ளது இந்த நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவும், இளம்பெண்களின் தொப்பையை குறைக்கவும் இந்த நார்ச்சத்து உதவும். இதில் விட்டமின் சி சத்து உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மேலும் காது, சளித்தொல்லைகலையும்,ஃப்ளூ காய்ச்சல் வராமலும் தடுக்கும். இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் கால்சியம் எலும்பு மண்டலத்தை பலப்படுத்தும் மேலும் அன்னாசிபழம் ரத்தம் உற்பத்தி செய்யவும் ரத்தத்தை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. அன்னாசி பழம் சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும். ரத்த சோகை மற்றும் மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும்.இதயம் பலவீனமானவர்கள் இதை சாப்பிடலாம். அன்னாசி பழத்தை சாப்பிடுவதனால் பித்த நோய்கள் குறையும் ஜீரண சக்தியை அதிகரிக்கும் இது தோல் மற்றும் கண் நோய்களையும் குணமாக்கும். அன்னாசி பழசாரை பாலுடன் கலந்து குடித்தால் ஆண்மை அதிகரிக்கும். மேலும் இவ்வாறு கலந்து குடிப்பதால் உடலில் சோர்வு இருந்தால் உடல் புத்துணர்ச்சி அடையும்.

அன்னாசி பழத்தின் தீமைகள்

 அன்னாசி பழத்தில் சர்க்கரை தன்மை அதிகம் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உண்பதை தவிர்க்க வேண்டும்.கர்ப்பிணிகள் ஆரம்ப காலத்தில் இதை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும்.மேலும் பழுத்த அன்னாசி பழம் பல் பிரச்சனைகளை உண்டாக்கும்,பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டால் வயிற்று பிரச்சினைகளும் செரிமான குறைவும் ஏற்படும்

அன்னாசி பழத்தை பயன்படுத்தும் முறை

அன்னாசி பழத்தை வாங்கும்போது அளவு பெரிதாகவும் வெளிப்புறத்தில் கீறல்கள் ஏதுமில்லாமலும் தட்டிப் பார்க்கும் போது அதிக சத்தம் கேட்கக் கூடியதாகவும் முகர்ந்து பார்க்கும் போது நல்ல மணம் உடையதாகவும் இருக்க வேண்டும்

அன்னாசி பழத்தை வாங்கின நாளே சாப்பிடுவது நல்லது அல்லது முழுமையாகவோ இல்லை  சிறு துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து ஒரு நாளைக்குள் பயன்படுத்த வேண்டும்.

நன்றி
Prabhu

Post a Comment

1 Comments

Thank you for comment