சப்பாத்தி ரோல் புதிய காலை உணவு ஹெல்த் ஃபுட்ஒரே மாதிரியான காலை உணவை சாப்பிட்டு போர் அடிக்குதா அப்போ இதை கண்டிப்பாக இது பாருங்க

Header Ads

சப்பாத்தி ரோல் புதிய காலை உணவு ஹெல்த் ஃபுட்ஒரே மாதிரியான காலை உணவை சாப்பிட்டு போர் அடிக்குதா அப்போ இதை கண்டிப்பாக இது பாருங்க

தினமும் காலையில் ஒரேமாதிரியான காலை உணவை சாப்பிட்டு போரடிக்குதா அப்போ இந்த உணவும் உங்களுக்காக

சப்பாத்தி ரோல் எப்படி செய்வது
ஃபேஸ்புக்கிலும் பாலோ செய்யுங்கள்
சப்பாத்தி ரோல் செய்முறை
அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்
எண்ணெய் சூடானதும் 2 பெரிய வெங்காயம் எடுத்து நீளவாக்கில் சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும் அதையும் கடாயில் சேர்த்து வதக்கவும்
பின்பு மூன்று கேரட்டை எடுத்து அதையும் நீளவாக்கில் வெட்டி அதையும் சேர்த்துக் கொள்ளவும்
150 கிராம் பீன்சை எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி சேர்க்கவும்
ஒரு உருளைக்கிழங்கையும் நீளவாக்கில் வெட்டி அதையும் சேர்க்கவும்
இரண்டு தக்காளிகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி சேர்க்கவும்
நன்றாக வதக்கவும்

இன்னும் மூன்று கேப்ஸிகம் எடுத்து சிறு சிறு துண்டுகளாக அல்லது நீளவாக்கில் வெட்டி அதையும் சேர்க்கவும்
கொத்தமல்லி இலை சிறிது தூவி கொள்ளவும்
தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
சிவப்பு மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள் 2 டீஸ்பூன் ஆகிய விகிதத்தில் மசாலா சேர்த்துக் கொண்டு நன்றாக கிளறி விடவும்
மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக கிளறிக் கொள்ளவும்
 15 நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் இருந்தால் சிறந்தது 
 இப்போது சப்பாத்தி ரோல் காண ஸ்டாப் தயாராகி விட்டது இனி சப்பாத்தி ரோல் செய்யலாம

சப்பாத்தி மெலிதாக

சப்பாத்தியின் மேல் 2 டீஸ்பூன் தக்காளி சாஸ் தடவி கொள்ளவும்
அதன் மேல் நாம் செய்த வெஜிடபிள் ஸ்டாப் சப்பாத்தியின் மேல் வைக்கவும்
கைகளால் சப்பாத்தியை மடித்துக் கொள்ளவும்
இப்போது சப்பாத்தி ரோல் தயார் ஆகிவிட்டது இனி பரிமாறிக் கொள்ளவும்
இந்த சப்பாத்தி ரோல் க்கு தயிர் பச்சடி சைட் டிஷ் ஆக வைத்தால் இன்னும் சுவை கூடும்

இதை வீடியோவாக பார்க்க கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது


Post a Comment

2 Comments

Thank you for comment