கல்யாண வீட்டு சுவையில் சுவையான பீட்ரூட் ஜாம் செய்வது எப்படி

Header Ads

கல்யாண வீட்டு சுவையில் சுவையான பீட்ரூட் ஜாம் செய்வது எப்படி

 கல்யாண வீட்டு சுவையில் சுவையான பீட்ரூட் ஜாம் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

பீட்ரூட் 2
 நெய் 3 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள் கால் டீஸ்பூன்
 சீனி ஒரு கப்
 அண்டி பருப்பு கிஸ்மிஸ் பழம் 10
செய்முறை
ஒரு கடாயில் பீட்ரூட்டை தோல் நீக்கி கழுவி கொள்ள வேண்டும் பின்பு சிறிய துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக்கொள்ளவேண்டும்  கடாயில்  ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு  நறுக்கி வைத்திருந்த பீட்ரூட்டை இதனுடன் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின்பு சூடு ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின்பு ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு நெய் காய்ந்தவுடன் முந்திரிப்பருப்பு கிஸ்மிஸ் இரண்டையும் நெய்யில் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்  பின்பு அதே கடாயில் நெய் விட்டு அரைத்து வைத்திருந்த பீட்ரூட்டை இதனுடன் நன்றாக கிளற வேண்டும் பச்சை வாசனை போகும் வரை கிளறி கொள்ள வேண்டும் பின்பு ஒரு கப் சீனி சேர்த்து நன்றாக கிளற வேண்டும் அதனுடன் ஏலக்காய்த் தூள் கால் டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும் அண்டி பருப்பு கிறிஸ்மஸ் பழம் சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்றாக கிளற வேண்டும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும் நெய் பிரிந்து வரும் கிளறி இறக்க வேண்டும் சுவையான கல்யாண வீட்டு பீட்ரூட் ஜாம் ரெடியாக உள்ளது நீங்கள் அதைை செஞ்சு பாருங்க உங்களுக்கும்  பீட்ரூட் ஜாம் மிகவும் பிடிக்கும் குழந்தைகளும் இதை விரும்பி  சாப்பிடு வாங்க 
 குழந்தைகளுக்கு பிடிக்கும் இந்த பீட்ரூட் ஜாம் இதை வீடியோவாக பார்க்க யூட்யூபில் வில்லேஜ் குக்கிங் சேனல் ஜீபாஸ் கிச்சன் சேனலை பாருங்கள் இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்தால் உங்கள் நண்பர்களுடன் ஷேர் பண்ணுங்க மேலும் பல சுவைகளில் இந்த ஜாம் கிடைக்கின்றது அவைகள் பைன் ஆப்பிள் ஜாம் அன்னாசி பழ ஜாம் ஆப்பிள் பழம் மாம்பழம் தக்காளி ஜாம் கேரட் ஜூஸ் வாழைப்பழ ஜாம்

Post a Comment

1 Comments

Thank you for comment