பட்டாணி உருளைக்கிழங்கு மசாலா செய்வது எப்படி

Header Ads

பட்டாணி உருளைக்கிழங்கு மசாலா செய்வது எப்படி

பட்டாணி உருளைக்கிழங்கு மசாலா செய்வது எப்படி
 தேவையான பொருள்கள்
உருளைக்கிழங்கு 3
 பச்சை பட்டாணி ஒரு கப்
 இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் மஞ்சள் கால் டீஸ்பூன்
 வத்தல் பொடி 2 டேபிள்ஸ்பூன் தனியா பொடி ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலா பொடி ஒன்றரை டேபிள்ஸ்பூன்
 உப்பு தேவையான அளவு கறிவேப்பிலை ஒரு கொத்து மல்லி தழை சிறிதளவு 
கடலை எண்ணை மூன்று டேபிள் ஸ்பூன்
 வெங்காயம்-1 
பெருஞ்சீரகம் ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி-2
செய்முறை
 அடுப்பை பத்த வைத்துக்கொள்ளவேண்டும் பின்பு ஒரு குக்கரில் மூன்று உருளைக்கிழங்கு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் பின்பு ஒரு கடாயில் 3 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு சிறிதளவு பெருஞ்சீரகம் சிறிதளவு சேர்த்து நன்றாகப்பொறியை விட வேண்டும் பின்பு பெரிய வெங்காயம் கட் பண்ணி இதனுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும் நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டுபேஸ்ட் சேர்த்து கொள்ள வேண்டும் இரண்டு தக்காளிசேர்த்துக் கொள்ள வேண்டும் நன்றாக வதங்கிய உடன் கால் டீஸ்பூன் மஞ்சள் 2 டேபிள்ஸ்பூன் வத்தல் கரம்மசாலா பொடி ஒன்னரை டீஸ்பூன் பெருஞ்சீரகம் ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும் ஒரு கப் பட்டாணியைை நன்றாக கழுவி10 நிமிடம் ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் இதனை அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்றாகக் கிளறிவிட வேண்டும் தேவையான அளவுஉப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்பின்புவேகவைத்த கட் பண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும் உருளைக்கிழங்கை இதனுடன் சேர்த்து கிளற வேண்டும் இப்போது சுவையான பட்டாணிஉருளைக்கிழங்கு மசாலாா தயாராக உள்ளது நீங்களும் இதை செஞ்சு பாருங்க


Post a Comment

0 Comments