உருளைக்கிழங்கு 3
பெரிய வெங்காயம்-2
பச்சை மிளகாய் 5
கடுகு சிறிதளவு
கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன் எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு பொட்டுக்கடலை 2 டேபிள்ஸ்பூன் மல்லித்தழை சிறிதளவு
மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் கருவேப்பிலை ஒரு கொத்து
இஞ்சி சிறிதளவு
பெருஞ்சீரகம் சிறிதளவு
செய்முறை
ஒரு குக்கரில் உருளைக்கிழங்கை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும் அதனை 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் பின்பு தோல் நீக்கிவிட வேண்டும் சிறிய துண்டுகளாக கட் பன்னிஎடுத்துக்கொள்ள வேண்டும் பின்பு ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட வேண்டும் சிறிதளவு கடுகு சேர்த்துக்கொள்ளவேண்டும் கடுகு பொரிந்தவுடன் சிறிதளவு இஞ்சி விழுதைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் பெருஞ்சீரகம் கால்டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும் ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும் நன்றாக பொரிந்தவுடன் கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூ சேர்த்துக் கொள்ளவேண்டும் பொட்டுக்கடலை 2 டீஸ்பூன் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் அதனை சிறிது தண்ணீர் விட்டு கலக்கி எடுத்துக்கொள்ளவேண்டும் இப்போது கடாயில் கடலை பருப்பு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக்கொள்ளவேண்டும் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும் வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் கரைத்து வைத்திருந்த பொட்டுக்கடலை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் பச்சை வாசனை போகும் வரை நன்றாக அடுப்பில் போட்டு கிளற வேண்டும் கட் பண்ணி வைத்திருந்த உருளைக்கிழங்கை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் இப்போது தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் மல்லித்தழை போட்டு இறக்கிக் கொள்ளலாம் சுவையான ஹோட்டல் சுவையில் பூரி மசாலா செய்யும் முறை இதுதான் நீங்களே இதை செஞ்சு பாருங்க உங்களுக்கும் கண்டிப்பாக இது பிடிக்கும்
0 Comments
Thank you for comment