மாங்காய் அரை கிலோ
மிளகாய் தூள் ஒரு கப்
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு
ஒரு கப் நல்லெண்ணெய்
கடுகு சிறிதளவு
வெந்தயம் கால் டீஸ்பூன் பெருங்காயப் பொடி கால் டீஸ்பூன் கருவேப்பிலை ஒரு கொத்து வரமிளகாய் 3
செய்முறை
அடுப்பைப் பற்ற வைத்துக் கொள்ள வேண்டும் பின்பு ஒரு கடாயில் ஒரு கப் நல்லெண்ணெய் விட வேண்டும் என்னை காய்ந்தவுடன் கடுகு வெந்தயம் சிறிதளவு கருவேப்பிலை ஒரு கொத்து வர மிளகாய் 3 சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும் பின்பு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும் கழுவி நறுக்கி வைத்த மாங்காய் துண்டுகளை பொடியாக கட் பண்ணி எடுத்துக்கொள்ளவேண்டும் அதை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் பின்பு நன்றாக கிளற வேண்டும் வத்தல் பொடி ஒரு கப் சேர்த்துக் கொள்ள வேண்டும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் பெருங்காயப்பொடி சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்றாக கிளற வேண்டும் 5 நிமிடம் அடுப்பில் வேக வைக்க வேண்டும் இப்போது சுவையான மணமான மாங்காய் ஊறுகாய் தயாராக உள்ளது தயிர் சாதம் பருப்பு சாதம் சாம்பார் சாதம் அனைத்துக்கும் மிகவும் பொருத்த மான மாங்காய் ஊறுகாய் நீங்களும் இதை செஞ்சு பாருங்க உங்களுக்கும் மிகவும் பிடிக்கும்
0 Comments
Thank you for comment