முட்டை 4
பெரிய வெங்காயம் 3
கடுகு சிறிதளவு
தக்காளி 2
கடலை எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி இலை சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு
கரம் மசாலா தூள் ஒன்றரை டீஸ்பூன் வத்தல் பொடி ஒரு டீஸ்பூன் கருவேப்பிலை ஒரு கொத்து
உப்பு சிறிதளவு
பெருஞ்சீரகம் ஒரு டீஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயை அடுப்பில் எடுத்துக் கொள்ளவேண்டும் கடாய் காய்ந்ததும் 4 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய் சேர்க்கவேண்டும் கடலை எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் பின்பு பெருஞ்சீரகம் சேர்த்து கொள்ள வேண்டும் வெங்காயத்தை பொடிப் பொடியாக கட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் அதை மிக்சியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் 2 தக்காளி மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் இரண்டையும் எண்ணெய் சேர்த்து வதக்க வேண்டும் நாலு முட்டை அவித்து எடுத்து கொள்ள வேண்டும் பின்பு தக்காளி வெங்காயம் நன்றாக கிளற வேண்டும் ஒரு கொத்து கருவேப்பிள்ளை சேர்த்துக் கொள்ளவேண்டும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவேண்டும் கர மசாலா சேர்த்துக் கொள்ள வேண்டும் வத்தல் தூள்சேர்த்துக் கொள்ள மீண்டும் நன்றாகக் கிளறிக் கொள்ள வேண்டும் இப்போது உடைத்து வைத்திருந்த முட்டையை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்றாக கிளற வேண்டும் அரைகிளாஸ் தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும் நன்றாக கிளறிநன்றாக வெந்தவுடன் இறக்கிக் கொள்ள வேண்டும் இப்போது சுவையான முட்டை கிரேவி தயாராக உள்ளது நீங்கள் இதை செஞ்சு பாருங்க உங்களுக்கு மிகவும் பிடிக்கும்
0 Comments
Thank you for comment