சுவையான மட்டன் கிரேவி செய்வது எப்படி

Header Ads

சுவையான மட்டன் கிரேவி செய்வது எப்படி

சுவையான மட்டன் கிரேவி செய்வது எப்படி
 தேவையான பொருள்கள்
 மட்டன் அரை கிலோ 
சின்ன வெங்காயம் 100 கிராம்
 பட்டை பிரிஞ்சிஇலை சிறிதளவு இஞ்சிபூண்டு சிறிதளவு
 கடலை எண்ணெய் ஒரு கப் 
கடுகு சிறிதளவு 
கருவேப்பிலை ஒரு பிடி
 கரம் மசாலா ஒன்னரை டீஸ்பூன் வத்தல் பொடி சிறிதளவு
 மல்லி பொடி ஒரு டீஸ்பூன்
 மட்டன் பொடி தேவைக்கேற்ப
 உப்பு சிறிதளவு 
மல்லி இலை ஒரு கப் 
புதினாஇலை   சிறிதளவு
 தக்காளி நாலு


செய்முறை
மட்டன் நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும் குக்கர் ஒன்றில் மட்டனை போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும் சிறிது உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை அடுப்பில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் பின்பு தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும் பின்பு சின்ன வெங்காயத்தை பொடிசாக நறுக்கிக் கொள்ளவேண்டும் இஞ்சி பூண்டு விழுதை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு கடாயில் கடலை எண்ணெய் விட்டு சூடேறியதும் கடுகு போட்டு போட்டுக்கொள்ள வேண்டும் பின்பு கருவேப்பிலை சிறிதளவு போட்டுக்கொள்ள வேண்டும் நன்றாக காய்ந்தவுடன் சின்ன வெங்காயத்தை அதில் போட்டு நன்றாக வதக்க வேண்டும் பிரிஞ்சி இலை பட்டை போன்றவற்றையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இஞ்சி பூண்டு விழுதை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் சின்ன வெங்காயம் நன்றாக பொன்னிறமாக வந்த பின்பு தக்காளியை சேர்த்து வதக்கவேண்டும் வத்தல் பொடி இரண்டு டீஸ்பூன் போட வேண்டும் மல்லித் தூள் ஒன்றரை டீஸ்பூன் போட்டுக்கொள்ளுங்கள் கரம் மசாலா பொடி இரண்டு டீஸ்பூன் போட்டுக்கோங்க மட்டன் போடி தேவையான அளவு போட்டுக்கோங்க நன்றாக வதக்கி வேகவைத்து எடுத்த மட்டனை இதில் சேர்த்துக்கோங்க பின்பு கொத்தமல்லித்தழை புதினா இலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் இப்போது ஊற்றிய தண்ணீர் வற்றும் வரை வதக்க வேண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள் கிரேவி வற்றிய பிறகு இறக்கிக் கொள்ளுங்கள் இப்போது சுவையான மட்டன் கிரேவி தயாராக உள்ளது இது சுவையாக இருக்கும் அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவாங்க நீங்களும் இதை செஞ்சு பாருங்க

Post a Comment

0 Comments