நாகர்கோவிலில் அடை பாயாசம் செய்வதற்கு தேவையான பொருட்கள்
அடை ஒரு கப்
வெல்லம் 1/4கிலோ
ஜவ்வரிசி அரை கப்
தேங்காய்பால் அரை மூடியை எடுத்து அரைத்து தேங்காய் பால் எடுக்கவும் தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டி நெய்யில் வறுத்து எடுக்கவும் முந்திரி பருப்பு 10 எண்ணம்
கிஸ்மிஸ் பழம் 10 எண்ணம்
செய்முறை
அடையை சிறிது தண்ணீர் வைத்து அவித்துக் கொள்ளவும் அவித்த தண்ணீரை இழுத்து வெளியேற்றி விடவும் பின் இரு முறை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும் ஜவ்வரிசியை சிறிது தண்ணீர் விட்டு நன்கு அடித்துக் கொள்ளவும் அதை மாற்றி வேறு ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும் பின்பு வெல்லத்தை சிறிது தண்ணீர் வைத்து பாகு வைக்கவும் அந்த பாகு அடையை தட்டவும் ஜவ்வரிசியையும் தட்டவும் 3 டீஸ்பூன் நெய் சேர்த்து சூடாக்கவும் முந்திரிப் பருப்பு கிஸ்மிஸ் பழம் தேங்காய் ஆகியவற்றை சேர்க்கவும் தேங்காய் பாலை சேர்க்கவும் ஐந்து நிமிடம் சூடாக்கி இறக்கவும் நாகர்கோவில் சுவையான அடை பாயாசம் தயார்
இதுபோன்ற சமையல் குறிப்பு போஸ்ட்களை பார்க்க இதை ஷேர் பண்ணுங்க
0 Comments
Thank you for comment