உருளைக்கிழங்கு இருக்கா இதை செய்து பாருங்கள். அசத்தலான சாயங்கால ஸ்னாக்ஸ்

சுலபமாக இதை செய்து முடித்திடலாம்

உருளைக்கிழங்கை எடுத்து கழுவி அதன் தோலை உரித்துக் கொள்ள வேண்டும்

பின்பு நான்கு அல்லது ஐந்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

இரண்டு டீஸ்பூன் எண்ணெயை எடுத்துக் கொள்ளவும்

அதில் நல்ல மிளகு பொடியை இரண்டு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்

வத்தல் பொடி 4 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்

நன்றாக கலக்கி கொள்ளவும்

அதனுடன் உப்பு மற்றும் சோள மாவு 2 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்

இதை நன்றாக கலந்து உருளைக்கிழங்கின் மீது ஊற்றவும்

உருளைக்கிழங்கை நன்கு கலக்கி

10 நிமிடம் ஊற வைக்கவும்
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி மொரு மொரு என வரும் வரை மிதமான தீயில் இருமுறை பொரித்து எடுக்கவும்

இந்த சாயங்காலம் சாப்பிட அருமையான ஸ்னாக்ஸ் தயாராகிவிட்டது
3 Comments
VERY NICE RECIPES
ReplyDeleteWOOW
ReplyDeleteYUMMY
ReplyDeleteThank you for comment