தேவையான பொருள்கள்
பழுத்த வாழைப்பழம் ஐந்து
ரவை 300 கிராம்
ஏலக்காய்த்தூள் சிறிதளவு
துருவிய தேங்காய் ஒரு மூடி
மைதா மாவு 300 கிராம்
ரவை 300 கிராம்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை 300 கிராம்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
வறுத்த ரவையை சலித்த மாவையும் வாழைப்பழத்தையும் சர்க்கரை ஏலக்காய்த்தூள் தேங்காய் துருவல் கலந்து 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள் இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளுங்கள் பின்பு நன்றாக ஊறிய பிறகு ஒரு வாணலியில் எண்ணை நன்றாக காய்ந்தவுடன் கலந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு நன்றாக பொன்னிறமாக வந்தவுடன் பின்புறம் மாற்றி போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் இது நன்றாக பெரிய அளவில் உப்பி வரும் பின்பு பொன்னிறமானதும் எடுத்து பரிமாறலாம் சூடாக பரிமாறலாம் இது சுவையாக இருக்கும் நீங்களும் செஞ்சு பாருங்க
1 Comments
Nice
ReplyDeleteThank you for comment