ஆந்திரா மற்றும் தமிழ்நாடு களில் அதிகமாக இந்த கார பிஸ்கட் பிஸ்கட் எனப்படும் கோதுமை பிஸ்கட் அதிகமாக சாப்பிட்டு வருகின்றனர் இந்த பிஸ்கட் எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்
* கோதுமை மாவு 2
* கப் எள்ளு 2 டீஸ்பூன்
* பேக்கிங் பவுடர் அரை டீஸ்பூன்
* பேக்கிங் சோடா கால் டீஸ்பூன்
* உப்பு தேவையான அளவு
* காஷ்மீர் சிகப்பு மிளகாய் 4 எண்ணம்
* பச்சை மிளகாய் 4 எண்ணம்
* சின்ன வெங்காயம் 15 எண்ணம்
* இஞ்சி சிறிதளவு
* பூண்டு நான்கு அல்லது ஐந்து எண்ணம்
* ஏலக்காய்-2
* சோம்பு ஒரு டீஸ்பூன்
* பட்டை 2 துண்டு
* முட்டை 2
* துருவிய தேங்காய் அரை கப்
* பட்டர் கால் கப்
* நாட்டு சர்க்கரை அரை கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவு சேர்க்கவும்
அதனுடன் ஒரு டீஸ்பூன் கருப்பு எள்ளு அல்லது வெள்ளை நிற எள்ளு சேர்த்துக் கொள்ளவும்
அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்துக் கொள்ளவும்
கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளவும்

நன்றாக கலக்கி விடவும்

கலக்கிய பின் இதை தனியாக எடுத்து வைக்கவும்

பின்பு மிக்ஸியில் காஷ்மீரி மிளகாய் நான்கு மற்றும் பச்சை மிளகாய்-4 மிக்ஸி கிண்ணத்தில் போடவும்

அதனுடன் இஞ்சி சிறு சிறு துண்டுகளாக வெட்டி போடவும்

பூண்டு 5 எண்ணம் சேர்த்துக்கள்ளவும்

சின்ன வெங்காயம் 15 எண்ணம் அதையும் சேர்த்துக் கொள்ளவும்

இதனுடன்

2 ஏலக்காய் 2 பட்டை ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்க்கவும்

கால் கப் துருவிய தேங்காய் சேர்த்து கொள்ளவும்

தண்ணீர் சேர்க்காமல்
நன்றாக அரைத்துக் கொள்ளவும் இதையும் தனியாக எடுத்து வைக்கவும்
மற்றொரு பாத்திரத்தில் 100ml பட்டறை சேர்த்துக் கொள்ளவும்

அதனுடன் கால் கப் சுத்தமான சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்

இவற்றின் நன்றாக கலக்கி கொள்ளவும்

அதனுடன் இரண்டு முட்டைகளை அடிதது ஊற்றி நன்றாக கலக்கி விடவும்

கலக்கி விட்டபின் நாம் அரைத்து வைத்த மசாலாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலக்கி விடவும்

கலக்கிய பின் நாம் முதலில் தயார் செய்து வைத்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கி கொள்ளவும்

அதை நன்றாகப் இணைந்து இந்த பக்குவத்தில் சப்பாத்தி மாவு பதத்தில் எடுக்கவும்

அதை சிறுசிறு உருண்டைகளாக்கி கைகளால் பிஸ்கட்டை அளவு உருட்டி கொள்ளலாம் அல்லது

பிஸ்கட் அச்சு மூலம் வெட்டிக் கொள்ளலாம்

இதன்மேல் வழுவழுப்பான முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து பிஸ்கட்டின் மேல் தடவிக் கொள்ளவும்

இதை ஓபன் அல்லது குக்கரில் வைத்து மிதமான சூட்டில் 20 நிமிடம் சூடாக்கிக் கொள்ளவும்

சுவையான கார பிஸ்கட் தயாராகிவிட்டது இது இரண்டு மாதங்கள் வரை வைத்து சாப்பிடலாம்

இதை வீடியோ வடிவில் பார்க்க கீழே லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது
3 Comments
SUPER AKKA THANKSS FOR SHARING
ReplyDeletenice akka
ReplyDeleteSuper recipe
ReplyDeleteThank you for comment